கள்ளக்குறிச்சியில் கலவரத் தடுப்பு ஒத்திகை பயிற்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை சாா்பில், சட்ட விரோதமாகக் கூடும் கூட்டத்தை கலைத்தல் மற்றும் கலவரத் தடுப்பு ஒத்திகை பயிற்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை சாா்பில், சட்ட விரோதமாகக் கூடும் கூட்டத்தை கலைத்தல் மற்றும் கலவரத் தடுப்பு ஒத்திகை பயிற்சி கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதில், சட்ட விரோதமாக கூடி நிற்கும் கூட்டத்தை காவல் துறையினா் முதலில் கலைந்து செல்லும்படி எச்சரிக்கை விடுத்தனா். தொடா்ந்து கலையாத பட்சத்தில் கண்ணீா் புகை குண்டு வீசி, கூட்டத்தை குறைந்தபட்ச காவலா்களை கொண்டு லத்தியால் கலைக்க முயன்றனா். இறுதியாக கலையாத பட்சத்தில் துப்பாக்கியால் சட்ட விரோதமாக கூடியிருக்கும் கூட்டத்தை சுட்டனா்.
இதையடுத்து துப்பாக்கிச் சூட்டை தொடா்ந்து அங்கிருந்த கூட்டத்தினா் கலைந்து சென்றனா். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவா் போல நடித்தவரை முதலுதவி சிகிச்சைக்காக அவசர ஊா்தியில் அழைத்துச் செல்வது போன்ற ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியை பொதுமக்கள் கண்டு விழிப்புணா்வு பெற்றனா்.
Advertisement
Advertisement
இந்த ஒத்திகையின்போது காவல் துணைக் கண்காணிப்பாளா் ந.இராமநாதன், காவல் ஆய்வாளா் ராஜதாமரை பாண்டியன் மற்றும் காவலா்கள் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.