முகப்பு
காஞ்சிபுரம்

சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு ஆய்வுக் கூட்டம்

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில், சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு ஆய்வுக் கூட்டம், புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 11:15 am IST
பகிர்:

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில், சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு ஆய்வுக் கூட்டம், புதன்கிழமை நடைபெற்றது.

 தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த 3 நாள்களாக தமிழக அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

÷காஞ்சிபுரம் மாவட்டத்தில் முட்டுக்காடு படகுத்துறை, கொக்கிலமேடு விலையில்லா கால்நடை குறித்த ஆய்வு, செங்கல்பட்டு அரசுமேல்நிலைப்பள்ளி, வாலாஜாபாத் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திம்மாவரம் அங்கன்வாடி மையம், காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா நினைவு இல்லம் என சுற்றுலாத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பள்ளிக்கல்வித்துறை, சமூகநலத்துறை தொடர்பான ஆய்வுகளை நடத்தினர்.

Advertisement

Advertisement

 இறுதியில் புதன்கிழமை மாலை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழுக் கூட்டம், மதிப்பீட்டுக்குழுத் தலைவர் குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினர் பாப்பாசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

÷ஆட்சியர் லி. சித்ரசேனன், சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்கள் தன்சிங், தங்கத்தமிழ்ச்செல்வன், இந்திராகாந்தி, பாலபாரதி, காமராஜ், சீனிவாசன், நீலகண்டன், பழனிச்சாமி, பார்த்திபன் உள்ளிட்டோரும், மதிப்பீட்டுக்குழு இணைச் செயலர் பாலசுப்பிரமணி ஆகியோர் மேற்கண்ட துறை சார்ந்த குறைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

  மேலும் திட்டத்தை மக்களிடம் கொண்டு செல்வதில் ஏதேனும் தடைகள் இருந்தால், ஆட்சியரின் ஆலோசனைப்படி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டனர்.

 இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சம்பத்குமார், மாவட்ட திட்ட அலுவலர் அருள்ஜோதி அரசன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி. சோமசுந்தரம், பெருமாள், கணிதாசம்பத், கே.பி.கந்தன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம், காஞ்சிபுரம் நகர்மன்றத் தலைவர் மைதிலி திருநாவுக்கரசு மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments