முகப்பு
காஞ்சிபுரம்

காடுவெட்டி குரு அக்டோபர் 25-ல் ஆஜராக உத்தரவு

வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு வரும் அக்டோபர் 25-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று காஞ்சிபுரம் நீதிமன்றம்

Updated On : 12 செப்டம்பர் 2013, 10:53 am IST
பகிர்:

வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு வரும் அக்டோபர் 25-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று காஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் அருகே தாமல் கிராமத்தில் கடந்த 2013 மார்ச் 28-ஆம் தேதி வன்னியர் சங்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய காடுவெட்டி குரு, தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

Advertisement

Advertisement

இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட அரசு வழக்குரைஞர் ஐய்யன்பேட்டை சம்பத் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் 2-ல் வழக்குப் பதிவு செய்தார்.  இந்த வழக்குத் தொடர்பாக காடுவெட்டி குரு கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அப்போது அவரை மீண்டும் செப்டம்பர் 11-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி செல்வக்குமார் உத்தரவிட்டார்.

இந்நிலையில் புதன்கிழமை புழல் சிறையில் உள்ள காடுவெட்டி குருவை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.

அப்போது காடுவெட்டி குருவிடம் விசாரணை நடத்திய நீதிபதி செல்வக்குமார், வரும் அக்டோபர் 25-ஆம் ஆஜராக உத்தரவிட்டார்.

     இதைத் தொடர்ந்து காடுவெட்டி குரு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.