முகப்பு
சினிமா

6 முறை தேசிய விருது வென்ற இயக்குநர் இமயம் பாரதிராஜா!

6 முறை தேசிய விருது வென்று இயக்குநர் இமயம் பாரதிராஜா பற்றி...

Updated On : 10 ஜூன் 2026, 12:48 pm IST
இயக்குநர் பாரதிராஜா - கோப்புப் படம்
பகிர்:

பிரபல இயக்குநர் பாரதிராஜா உடல்நலக் குறைவால் இன்று காலமானார். திரையுலக கலைஞர்களும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் அவரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தக் குவிந்து வருகின்றனர்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான பாரதிராஜாவின் மகன் மனோஜ், கடந்தாண்டு மார்ச் மாதம் மாரடைப்பு காரணமாக காலமானார். அதன்பிறகு, பாரதிராஜாவின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சென்னை நீலாங்கரை இல்லத்தில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை காலை அவர் காலமானார்.

பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு முதல்வர் ஜோசப் பிஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இயக்குநர் பாக்யராஜ், நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, ராசிகா, சீமான் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement

Advertisement

தென்னிந்தியத் திரையுலகில் மூத்த இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாளை ஒரு நாள் அனைத்து சினிமா மற்றும் சின்னதிரை படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாகத் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

1970-களிள் பிற்பகுதியில் பாரதிராஜாவின் படங்கள் தமிழகத்தில் பேச ஆரம்பித்தபோது அதைக் கொண்டுசென்ற கருத்துகளும், எடுத்துச் சொன்ன கருத்துகளும் இன்றைக்கும் தமிழ திரையுலகில் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது.

அவர் அறிமுகப்படுத்திய அத்தனை நடிகர்களும் இன்றைக்கு வரைக்கும் தங்களுடைய திரைத்துறையில் அவர்கள் ஏற்று நடிக்கக்கூடிய கதாபாத்திரத்தில் தங்களுடைய முத்திரையைப் பதித்து வருகின்றனர். சாமானியர்களை நடிகர்களாகவும், நட்சத்திரங்களாக உருவாக்கியவர் பாரதிராஜா. முதல் மரியாதை, வேதம் புதிது, கருத்தம்மா உள்ளிட்ட படங்களுக்காக 6 முறை தேசிய விருது வென்றுள்ளார்.

பாரதிராஜா வென்ற 6 தேசிய விருதுகளின் விவரங்கள்

1982-ல் சிறந்த தெலுங்கு திரைப்படமான 'சீதாகோக சிலகா' என்ற படத்திற்குத் தேசிய விருது பெற்றார்.

1986-ல் 'முதல் மரியாதை' என்ற சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கு விருது பெற்றார்.

1988-ல் சமூகப் பிரச்னைகளுக்கான சிறந்த திரைப்படமான 'வேதம் புதிது' எனும் திரைப்படத்திற்கு விருது பெற்றார்.

1995-ல் குடும்ப நலனுக்கான சிறந்த திரைப்பட விருது 'கருத்தம்மா' படத்திற்கு அவருக்கு வழங்கப்பட்டது.

1996-ல் 'அந்தீமந்தாரை' சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருது பெற்றார்.

2001-ல் 'கடல் பூக்கள்' எனும் படத்திற்கு சிறந்த திரைக்கதைக்கான விருது வழங்கப்பட்டது.

மேலும், திரைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 2004-ம் ஆண்டு இந்திய அரசு அவருக்குப் பத்ம ஸ்ரீ விருதும், 2005-ல் சத்யபாமா பல்கலைக்கழகத்தால் கௌரவ டாக்டர் பட்டமும் பாரதிராஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

He has won the National Award six times for films such as Mudhal Mariyathai, Vedham Pudhithu, and Karuththamma.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.