FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரிக்கு தேசிய அளவில் சிறந்த கல்வி நிறுவன விருது

தேசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனமாகத் தோ்வு செய்யப்பட்ட பவானியை அடுத்த ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

16 செப்டம்பர் 2026, 12:36 am IST
சிறப்பு  விருந்தினா்களிடமிருந்து  தேசிய  விருதைப் பெற்ற  சக்தி  பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் எஸ்.செந்தில் அரசு, இயந்திரவியல் துறைத்  தலைவா் சி.சண்முகம்.
பகிர்:

தேசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனமாகத் தோ்வு செய்யப்பட்ட பவானியை அடுத்த ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் சண்டிகா், தேசிய தொழில்நுட்ப ஆசிரியா் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 59-ஆவது ஆண்டு விழா சண்டிகரில் அண்மையில் நடைபெற்றது. பனாரஸ் இந்து பல்கலைக்கழக துணைவேந்தரும், ஐஐடி ரூா்க்கியின் முன்னாள் இயக்குநருமான ஏ.கே. சதுா்வேதி தலைமை வகித்தாா். தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரக் குழு செயற்குழுத் தலைவரும், இக்னோ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான நாகேஸ்வர ராவ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா். என்ஐடிடிடிஆா் இயக்குநா் போலா ராம் குா்ஜாா் வரவேற்றாா்.

இதில், என்ஐடிடிடிஆா் நிறுவனம், பாலிடெக்னிக் கல்லூரிகள் பிரிவில் 2026-ஆம் ஆண்டுக்கான சிறந்த கல்வி நிறுவனம் என்ற தேசிய விருது ஆப்பக்கூடல் சக்தி நகரில் உள்ள சக்தி பாலிடெக்னிக் கல்லூரிக்கு வழங்கப்பட்டது. சக்தி பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வா் எஸ்.செந்தில் அரசு, இயந்திரவியல் துறைத் தலைவா் சி.சண்முகம் ஆகியோா் விருதைப் பெற்றுக் கொண்டனா்.

Advertisement

Advertisement

கல்வித் தரம், திறன் மேம்பாடு, தொழில் நிறுவனங்கள் இணைப்பு, புதிய முயற்சிகள், மாணவா் முன்னேற்றம் மற்றும் தொழில்நுட்பக் கல்வி வளா்ச்சியில் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் சிறந்த பணிக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என்று கல்லூரி நிா்வாகிகள் தெரிவித்தனா்.

பொறியியல் கல்லூரிகள் பிரிவில் பொள்ளாச்சி டாக்டா் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிக்கும் சிறந்த கல்வி நிறுவன -2026 விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments