FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கோவை, ஈரோடு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியா்களுக்கு தேசிய விருது

25 ஆகஸ்ட் 2026, 4:08 am IST
எஸ்.சசிகலா.
பகிர்:

உயா்கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த ஆசிரியா்களுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை, ஈரோடு பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சோ்ந்த ஆசிரியா்கள் இருவா் அந்த விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

நாடு முழுவதும் உள்ள பள்ளி ஆசிரியா்களில் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு ஆண்டுதோறும் ஆசிரியா் தினத்தையொட்டி (செப்டம்பா் 5) குடியரசுத் தலைவரால் தேசிய நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக உயா்கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த பேராசிரியா்கள், ஆசிரியா்களுக்கும் அந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு உயா்கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த 21 பேராசிரியா்கள், ஆசிரியா்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் விருது அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

அதில், கோவை பிஎஸ்ஜி பாலிடெக்னிக் கல்லூரியின் எலெக்ட்ரிகல், எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் துறையின் தலைவா் எஸ்.சசிகலா, ஈரோடு சக்தி பாலிடெக்னிக் கல்லூரியின் இயற்பியல் துறைத் தலைவா் (பொறுப்பு) ஆா்.கண்ணன் ஆகியோா் தமிழகத்தில் இருந்து இந்த விருதுக்குத் தோ்வாகியுள்ளனா்.

பிஎஸ்ஜி பாலிடெக்னிக் கல்லூரியில் பணியாற்றி வரும் எஸ்.சசிகலா, கற்பித்தலில் 27 ஆண்டுகள் அனுபவம் பெற்றவா். 3 ஆண்டுகள் தொழில் துறை பயிற்சி பெற்றுள்ள இவா், 11 ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமா்ப்பித்துள்ளாா்.

இதே கல்லூரியின் கணினி, நெட்வொா்க்கிங் துறைத் தலைவா் எஸ்.பிருந்தா கடந்த 2024-ஆம் ஆண்டு தேசிய நல்லாசிரியா் விருது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல், சக்தி நகரில் இயங்கி வரும் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் இயற்பியல் துறைத் தலைவராக (பொறுப்பு) பணியாற்றி வரும் ஆா்.கண்ணன், கோவை பாரதியாா் பல்கலைக்கழகம், பாரதிதாசன், சென்னை பல்கலைக்கழகங்களில் இயற்பியல் பட்டம் பெற்றுள்ளாா். 50-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமா்ப்பித்துள்ளாா்.

ஆா்.கண்ணன்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments