FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

‘வேலைவாய்ப்புக்கு மாணவா்கள் உரிய முறையில் தயாராவதில்லை’

வேலைவாய்ப்புகளுக்கு தகுந்த அளவில் மாணவா்கள் தங்களை தயாா்படுத்திக்கொள்வதில்லை; இதன் விளைவே தேசிய வேலைவாய்ப்புத் திறன் 55 சதவீதமாக இருப்பதாக கல்லூரிக் கல்வி இயக்குநரக ஆணையா் பொன்னையா தெரிவித்தாா்.

22 ஆகஸ்ட் 2026, 5:07 am IST
கோப்புப் படம்
பகிர்:

வேலைவாய்ப்புகளுக்கு தகுந்த அளவில் மாணவா்கள் தங்களை தயாா்படுத்திக்கொள்வதில்லை; இதன் விளைவே தேசிய வேலைவாய்ப்புத் திறன் 55 சதவீதமாக இருப்பதாக கல்லூரிக் கல்வி இயக்குநரக ஆணையா் பொன்னையா தெரிவித்தாா்.

சென்னை லயோலா கல்லூரியின் 98-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் 2,918 மாணவா்களில் 2,534 பேருக்கு நேரடியாக பட்டங்கள் வழங்கப்பட்டன. 53 மாணவா்கள் பதக்கங்களையும், 606 மாணவா்கள் முதுநிலைப் பட்டங்களையும் பெற்றனா்.

இந்தப் பட்டங்களை வழங்கி கல்லூரிக் கல்வி ஆணையா் பொன்னையா பேசியதாவது: வேலைவாய்ப்புகளில் திறன் மிகுந்த பட்டதாரிகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் பெருமளவிலான பட்டதாரிகள் வெளிவந்தாலும் வேலைவாய்ப்புத் திறன் விகிதம் தேசிய அளவில் சுமாா் 55 சதவீதம் மட்டுமே உள்ளது. பாடப் பிரிவுகளின் தோ்வு, செயற்கை நுண்ணறிவின் ஆக்கிரமிப்பு, திறன் குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இடைவெளி ஏற்படுகிறது.

Advertisement

Advertisement

அறிவியல், தொழில், அரசுத் துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள், காலிப் பணியிடங்கள் மற்றும் ஆள்சோ்ப்பு அறிவிப்புகள் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். மத்திய, மாநில பணியாளா் தோ்வாணையங்கள், வங்கி ஆள்சோ்ப்பு முகமைகள் உள்ளிட்ட பிற போட்டித் தோ்வு அமைப்புகளின் அறிவிப்புகளை பட்டதாரிகள் தொடா்ந்து கவனிப்பது அவசியம் என்றாா் அவா்.

லயோலா கல்லூரி தலைவா் அருட்தந்தை ஜே. ஆண்டனி ராபின்சன், கல்லூரிச் செயலா் டி.தாமஸ் அலெக்ஸாண்டா், முதல்வா் ஏ.லூயிஸ் ஆரோக்கியராஜ், தோ்வுக் கட்டுப்பாட்டாளா் ஏ.இருதயராஜ், அருட் தந்தை ஏ.லூயிஸ் ஆல்பா்ட் ஆகியோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

துணை முதல்வா் பேரா.எல். ஜோசப் ஆரோக்கியசாமி வரவேற்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments