தேசிய விருதைப் பெற்றார் நடிகர் மம்மூட்டி!
நடிகர் மம்மூட்டி தேசிய விருதைப் பெற்றுக்கொண்டார்....
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர் மம்மூட்டி பெற்றுக்கொண்டார்.
72-வது தேசியத் திரைப்பட விருதுகள் விழா முதல்முறையாக தில்லியிலிருந்து மாற்றப்பட்ட குஜராத் மாநிலம் ஏகதா நகரில் இன்று நடைபெற்று வருகிறது.
இதில், கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி வருகிறார்.
Advertisement
Advertisement
இதில், பிரம்மயுகம் திரைப்படத்திற்காக நடிகர் மம்மூட்டிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இது, மம்மூட்டி பெறும் 4-வது தேசிய விருது ஆகும்.
தமிழில் நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் திரைப்படத்துக்காக சிறந்த நடிகர் விருதைப் பெற்றுள்ளார். மேலும், சிறந்த தமிழ்த் திரைப்படமாக தேர்வான ராயன் படத்திற்காகவும் தனுஷ் தேசிய விருதைப் பெற்றுக்கொண்டார்.
Actor Mammootty received the National Award for Best Actor.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.