FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்!

நடிகர் தனுஷ் தேசிய விருதைப் பெற்றுக்கொண்டார்....

22 செப்டம்பர் 2026, 4:54 pm IST
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நடிகர் தனுஷ்
பகிர்:

கேப்டன் மில்லர் திரைப்படத்துக்காக நடிகர் தனுஷ் தேசிய விருதைப் பெற்றுக்கொண்டார்.

72-வது தேசியத் திரைப்பட விருதுகள் விழா முதல்முறையாக தில்லியிலிருந்து மாற்றப்பட்ட குஜராத் மாநிலம் ஏகதா நகரில் இன்று நடைபெற்று வருகிறது. இதில், கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி வருகிறார்.

இதில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 2024-ல் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்திற்காக நடிகர் தனுஷ் தேசிய விருதைப் பெற்றுக்கொண்டார். தேசிய சமூக சுற்றுச்சூழல் பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. மேலும், தனுஷ் நடித்த ராயன் திரைப்படம் சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசிய விருதுக்குத் தேர்வாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Actor Dhanush received the National Award for the movie Captain Miller.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments