முகப்பு
காஞ்சிபுரம்

மாநில ஹாக்கி அணியில் காஞ்சிபுரம் பவித்ரா தேர்வு

மாநில ஹாக்கி அணியில் காஞ்சிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி பவித்ரா தேர்வு பெற்றுள்ளார்.

Updated On : 12 செப்டம்பர் 2013, 10:53 am IST
பகிர்:

மாநில ஹாக்கி அணியில் காஞ்சிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி பவித்ரா தேர்வு பெற்றுள்ளார்.

மாநில அளவிலான மகளிர் ஹாக்கி அணித் தேர்வு அண்மையில் நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவிகள் கலந்து கொண்டனர்.

இத்தேர்வில் பங்கேற்ற காஞ்சிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி எல். பவித்ரா தமிழ்நாடு மாநில அணிக்குத் தேர்வு பெற்றார்.

Advertisement

Advertisement

அவர் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான மகளிர் ஹாக்கிப் போட்டியில் பங்கேற்க உள்ளார்.

மாணவியை, காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெ. தங்கநாயகி, பயிற்சியாளர் எஸ். ரமேஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.