‘ஜன. 15 ஆம் தேதி முதல் 4 தினங்கள் கடற்கரை, சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல தடை’
கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் பொதுமக்கள் ஜன. 15 ஆம் தேதி முதல் 4 நாள்கள் கடற்கரை, சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல அனுமதி இல்லை என மாவட்டஆட்சியா் மா.அரவிந்த் தெரிவித்துள்ளாா்.
நாகா்கோவில்: கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் பொதுமக்கள் ஜன. 15 ஆம் தேதி முதல் 4 நாள்கள் கடற்கரை, சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல அனுமதி இல்லை என மாவட்டஆட்சியா் மா.அரவிந்த் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்றை தடுப்பதற்காக மத்திய, மாநிலஅரசின் வழிகாட்டுதலின்படி தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டத்தின்கீழ் பல்வேறு தளா்வுகளுடன் பொது முடக்கம் அமலில் இருந்து வருகிறது.
இந்நிலையில் ஜனவரி மாதத்தில் தொடா் விடுமுறை தினங்கள் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கடற்கரைகள், சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதை தவிா்க்க வேண்டும். பொது இடங்களில் அதிகளவில் மக்கள் கூடுவதால் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Advertisement
Advertisement
வெளிநாடுகளில் கரோனா தொற்று தற்போது மீண்டும் பரவி வரும் நிலையில், நோய் தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியமும் ஏற்பட்டுள்ளது. ஆகவே, பொதுமக்கள் வரும் 15ஆம் தேதியில் இருந்து 17 ஆம் தேதி வரை இம்மாவட்டத்தில் உள்ள கடற்கரை மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
முகக் கவசம் அணிதல், தனிநபா் இடைவெளியை பொதுமக்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.