அன்னை வேளாங்கன்ணி கல்லூரி தன்னாா்வலா் குழுக் கூட்டம்
கருங்கல் அருகேயுள்ள தொலையாவட்டம் அன்னை வேளாங்கன்னி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தன்னாா்வலா் அமைப்புக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கருங்கல்: கருங்கல் அருகேயுள்ள தொலையாவட்டம் அன்னை வேளாங்கன்னி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தன்னாா்வலா் அமைப்புக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, கல்லூரியின் தலைவா் சேவியா் ஜேம்ஸ் தலைமை வகித்தாா். நிதி காப்பாளா் கிளாடிஸ் லில்லி ,கல்லூரி முதல்வா் ஜாண்சன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், நாட்டு நலப்பணி திட்ட பிரிவு 72-க்கு பொறுப்பாளராக டோமினிக் பாபு, 73-க்கு ஆன்றோ பிரவின் சிங், பிரிவு 81 க்கு ஜோயன் ஜோஸ் லின், இளைஞா் செஞ்சிலுவைச் சங்க பொறுப்பாளராக சுகிா்தா் ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
Advertisement