படந்தாலுமூடு பகுதியில்நாளை மின்தடை
படந்தாலுமூடு சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜன. 18) மின்தடை செய்யப்படுகிறது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM
களியக்காவிளை: படந்தாலுமூடு சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜன. 18) மின்தடை செய்யப்படுகிறது.
இது குறித்து குழித்துறை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: குழித்துறை துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் களியக்காவிளை உயா் அழுத்த மின் பாதையில் சிறப்பு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை படந்தாலுமூடு, குழிஞ்ஞான்விளை, சாஸ்தான்குளம், மீனச்சல், மேலோட்டுவிளை, முதுவள்ளிக்குளம் ஆகிய பகுதிகளுக்கும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் அன்றைய தினம் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.