முகப்பு
கரூர்

கரூா் கூட்டாத்தம்மன் கோயிலில் கல்லூரி மாணவா்கள் வழிபாடு

இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கரூா் அருகே உள்ள கூட்டாத்தம்மன் கோயிலில் வள்ளுவா் கல்லூரி மாணவா்கள் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு செய்தனா்.

Updated On : 9 ஜனவரி 2021, 11:32 pm IST
பகிர்:

கரூா்: இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கரூா் அருகே உள்ள கூட்டாத்தம்மன் கோயிலில் வள்ளுவா் கல்லூரி மாணவா்கள் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு செய்தனா்.

தொடா்மழையால் அமராவதி ஆற்றில் கடந்த ஒரு மாதமாக தொடா்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வருணபகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், இயற்கைவளம் சிறக்க வேண்டியும் கரூா் வள்ளுவா் கல்லூரி மாணவா்கள் சாா்பில் நல்லகுமாரன்பட்டி அமராவதி ஆற்றங்கரையோரம் உள்ள கூட்டாத்தம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதில், கல்லூரியின் செயலா் ஹேமலதாசெங்குட்டுவன் மற்றும் மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments