'சாக்லேட் கேட்டு அழுத உங்க பையன் செல்போனை கொடுத்தவுடனே அழுகையை நிறுத்திட்டானே, ஏன்?'
'அவனே ஆன்லைன்ல ஆர்டர் பண்ணி வாங்கிப்பான்!'
-தீபிகா சாரதி, சென்னை- 5.
'பொண்ணோட அப்பா பிரபல சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவராம்!'
'அதுக்காக, பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டாருக்கு பாகற்காய் ஜூஸ் கொடுக்கறது நல்லாயில்லை!'
'என்னப்பா சர்வர்... வாஷ் பேசின்ல தண்ணி வரலை?'
'டிப்ஸ் வைங்க, வரும்!'
-அ.ரியாஸ், சேலம்.
'இவரை ஏன் 360 டிகிரி அரசியல்வாதின்னு சொல்றாங்க?'
'எல்லா அரசியல் கட்சியிலும் ஒரு முழு ரவுண்ட் வலம் வந்துட்டாரு..!'
-மஞ்சுநாதன், பெங்களூரு.
'எஜமான்... உங்ககிட்ட பத்து வருஷமா வேலைப் பார்க்கிறேன்... என்னை நம்ப மாட்டேங்கிறீங்களே!'
'உன்னை நம்பாமலா வீட்டுச் சாவி அனைத்தையும் கொடுத்தேன்?'
'என்ன பயன்... ஒரு சாவியும் திறக்க மாட்டேங்குதே!'
'என்னங்க... குடிச்சிருக்கீங்களா?'
'இல்லையே?'
'பின் ஏன் சோத்துக்கு தயிருக்குப் பதிலா தோசை மாவை விட்டுப் பிசைந்து சாப்பிடுறீங்க?'
'காலையில இருந்து ஒவ்வொரு குப்பைத் தொட்டியா பார்த்துட்டு வர்றீங்களாமே ?'
'ஆமாம்... நீ தான் செயின் வேணும்னு கேட்டீயே... அதான், யாராவது குப்பைத்தொட்டியில போட்டு இருக்காங்களான்னு பார்த்தேன்!'
-நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.
'வீட்டு லோன் கேக்கறீங்களே... எப்படிக் கட்டுவீங்க?'
'மேஸ்திரியை வச்சுக் கட்டுவேன், சார்!'
'இவன் கொஞ்சம் காஸ்ட்லியான திருடன்னு எத வச்சுச் சொல்றே?'
'திருடுன பணத்தை எண்ண வீட்ல 'நோட் கவுன்ட்டிங் மெஷின்' வச்சிருக்கானே!'
'இந்த ஆபீஸ்ல எக்கசக்கமா லஞ்சம் வாங்குறவர் இவர்தான்னு ஊழல் ஒழிப்புத் துறை அதிகாரிங்க எப்படிக் கண்டுபிடிச்சாங்க?'
'ஏராளமான பாக்கெட்டுகள் வச்ச பேன்ட், ஷர்ட் போட்டிருந்தாராம்!'
-பர்வீன் யூனுஸ், சென்னை.
'தலைவரோட வீடு கோட்டை மாதிரியில இருக்கும்... அப்படியும் எப்படி திருடன் நுழைஞ்சான்?'
'காவலர்கள் கோட்டை விட்டுட் டாங்களாம்!'
'சாப்பாடு கெட்டுப்போச்சு, தாயி!'
'அப்படியா... இப்பத்தானே பிரமாதமா இருக்குன்னு சொல்லி ஐயா சாப்பிட்டாரு, ராப்பிச்சை!'
'சோபா இல்லாட்டி எனக்குத் தூக்கமே வராது!'
'உங்க மனைவியோட பேரு 'சோபா'வா சார்?'
'கத்தியைக் காட்டி மிரட்டினவனை எப்படிப் பயந்து ஓட வச்சீங்க?'
'சத்தமா கத்தி, ஊரைக் கூட்டித்தான்!'
'என்னைக் கேட்காமல் என் கணவர் எதுவுமே செய்யமாட்டார்டீ !'
'லஞ்ச்சுக்கு என்ன மெனு வேணும்னு உன்னைக் கேட்டாரே... அதுலயே தெரிஞ்சுக்கிட்டேன்டி!'
-வி.ரேவதி, தஞ்சை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.