தற்போதைய செய்திகள்

திருப்பூரில் திருடுபோன நகை உரிமையாளர்கள் நிதிநிறுவனம் முன் சாலைமறியல்

திருப்பூர், செப்.26: திருப்பூரில் பைனான்ஸ் கம்பெனியில் திருடு போன நகைகளின் உரிமையாளர்கள், திடீரென திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள பைனான்ஸ் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருடு போன நகை

தமிழ்ச்செல்வன்

திருப்பூர், செப்.26: திருப்பூரில் பைனான்ஸ் கம்பெனியில் திருடு போன நகைகளின் உரிமையாளர்கள், திடீரென திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள பைனான்ஸ் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

திருடு போன நகைகளுக்கு ஈடாக பணம் தருவதாக நிதி நிறுவனத்திலிருந்து தெரிவிக்கபட்டதை முதலீட்டாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

வரும் வியாழன் அன்று காலையில் திருடு போன நகைகள், அதன் உரிமையாளர்கள் குறித்த விவரத்தை அறிவிப்புப் பலகையில் ஒட்டிவிடுவதாகவும், அதன் பிறகு எவர் நகைகள் திருடு போனதோ அவர்கள் அன்று தங்கள் நிறுவன உரிமையாளரை நேரடியாக சந்தித்து பேசலாம் என்றும் அந்தக் கிளையின் மேலாளர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

வியாழன் அன்று அந்தக் கிளைக்கு வரும் நிதி நிறுவன உரிமையாளரிடம் நேரடியாகப் பேசி, திருடு போன நகை உரிமையாளர்கள் நகையாகவோ, பணமாகவோ திரும்பப் பெற்றுக் கொள்வது குறித்து முடிவு செய்யலாம் என்றும் சமாதானப் பேச்சு நடத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT