தற்போதைய செய்திகள்

சிவகிரியில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் சிவகிரியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முருகேசன்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் சிவகிரியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகிரி வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கக் கோட்டத் தலைவர் எம். செல்லையா தலைமை வகித்தார். பி. குலாம் முகம்மது முன்னிலை வகித்தார்.

2012-2013-ம் ஆண்டு அரவைப் பருவ கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 3,500 வழங்க வேண்டும், வெட்டுக் கூலியை ஆலை நிர்வாகம் ஏற்க வேண்டும், டாக்டர் ரங்கராஜன் குழு பரிந்துரைகளை அரசு நிராகரிக்க வேண்டும், தனியார் ஆலைகள் செய்யும் எடை மோசடியைத் தடுக்க அரசே எடை மேடை அமைக்க வேண்டும், கூட்டுறவு ஆலைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025-ல் தாயகம் திரும்பிய 23 லட்சம் ஆப்கன் மக்கள்!

ஆத்மார்த்தம்... நிவேதா தாமஸ்!

அசத்தும் சாம் கரண்! சிஎஸ்கே வாழ்த்து!

ஜம்முவில் ஆக.30 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

சிவாஜி படத்தில் நடிக்காதது ஏன்? சத்யராஜ் விளக்கம்!

SCROLL FOR NEXT