நாமக்கல், ஜுன் 2 : கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பிரபாகரன் இன்று நாமக்கல் வந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜுலை 4ம் தேதி வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து ஜுலை 25, 26ம் தேதிகளில் கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவ சேர்க்கை நடைபெறும். ஆகஸ்ட் 2 ம் வாரத்தில் இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான பாடங்கள் துவக்கப்பட உள்ளன.
கடந்த ஆண்டு கால்நடை மருத்துவப் படிப்புக்கு 5,700 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்த ஆண்டு இதுவரை 7950 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இன்னும் 3000 விண்ணப்பங்கள் பிரிண்ட் செய்யப்பட்டு தயாராக உள்ளன.
இந்த கல்வியாண்டில் தமிழகத்தில் கூடுதலாக கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உருவாகியுள்ளதே அதிக விண்ணப்பங்கள் விற்பனையாகக் காரணமாகும்.
இந்த ஆண்டு கால்நடை படிப்புகளை முடித்த 740 பேர் அரசு கால்நடை மருத்துவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, வேலையில்லா கால்நடை மருத்துவர்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் 200 கால்நடை மருத்துவ பட்டதாரிகள் படித்து வெளியேறுகின்றனர். இதேப்போல தேசிய அளவில் 1900 பேர் கால்நடை மருத்துவம் பயின்று வெளியே வருகின்றனர். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் கால்நடை மருத்துவர்களின் தேனை 3700 ஆக உள்ளது. எனவே ஐடி நிறுவனங்களுக்கு இணையாக வேலை வாய்ப்பு எளிதாக பெறும் துறையாக கால்நடை மருத்துவம் முன்னேறியுள்ளது. மாணவர்களிடையே இப்படிப்பினை படிக்கும் ஆர்வமும் அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.