பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெயர்களை வெளியிட்ட ஷிண்டே: மாநிலங்களவையில் சர்ச்சை
மகாராஷ்டிர மாநிலத்தில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்ட்ட சிறுமிகளின் பெயர்களை மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே மாநிலங்களவையில்
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:04 PM
மகாராஷ்டிர மாநிலத்தில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்ட்ட சிறுமிகளின் பெயர்களை மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே மாநிலங்களவையில் தெரிவித்தார். அவரின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி சுட்டிக்காடியதைத் தொடர்ந்து, தான் கூறியதை வாபஸ் பெறுவதாக ஷிண்டே தெரிவித்தார். சிறுமிகளின் பெயர்களை அவைக் குறிப்பிலிருந்து நீக்குவதாக மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே.குரியன் அறிவித்தார்.