வங்கதேசம் செல்கிறார் பிரணாப் முகர்ஜி
குடியரசுத் தலைவரின் பயணம், அரசியல் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதற்காக மேற்கொள்ளப்படவில்லை. அவர், இரு தரப்பு உறவுகளை உயர்நிலைக்கு கொண்டு
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இம்மாதம் 3ஆம் தேதி முதல் மூன்று தினங்களுக்கு வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மத்தாய், தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குடியரசுத் தலைவரின் பயணம், அரசியல் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதற்காக மேற்கொள்ளப்படவில்லை. அவர், இரு தரப்பு உறவுகளை உயர்நிலைக்கு கொண்டு செல்லவும், தீர்க்கப்படாத பிரச்னைகளைத் தீர்க்கவும் இந்தியா உறுதிபூண்டிருப்பதை அவர் வங்கதேசத்தின் தலைமையிடம் எடுத்துக் கூறுவார். இரு தரப்பு உறவுகளை மேலும் உயர்த்திக் கொண்டு செல்ல ஒரு வாய்ப்பாக பிரணாப் முகர்ஜியின் பயணம் அமையும் என்று கூறினார்.
Advertisement
Advertisement