முகப்பு
தற்போதைய செய்திகள்

23 வழிப்பறி வழக்குகளில் தொடர்புடையவர் கைது: ரூ.4.2 லட்சம் மதிப்புள்ள தங்கநகை பறிமுதல்

ஈஞம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜா.  இவர் வியாழக்கிழமை செம்மஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் நடந்து சென்றுக் கொண்டிருந்தாராம்.  அப்போது அங்கு

Updated On : 1 மார்ச் 2013, 7:41 pm IST
பகிர்:

சென்னை துரைப்பாக்கம் பகுதியில் 23 வழிப்பறி வழக்குகளில் தொடர்புடையவரை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.4.2 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ஈஞம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜா.  இவர் வியாழக்கிழமை செம்மஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் நடந்து சென்றுக் கொண்டிருந்தாராம்.  அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர், அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தையும், நகையையும் பறித்துச் சென்றாராம்.இதற்கிடையே அங்கு ரோந்து வந்த போலீஸார், ராஜா வழிப்பறி குறித்து தெரிவித்தார்.  இதையடுத்து போலீஸார் அந்த நபரை விரட்டிச் சென்று பிடித்தனர். பின்னர் அவரிடம் போலீஸார் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர், சேலையூர் காந்திநகரைச் சேர்ந்த கார்த்திக் என்ற பிராடு கண்ணன் (30) என்பது தெரியவந்தது.

போலீஸார் அவரிடம் பல கட்டங்களாக விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் துரைப்பாக்கம் பகுதியில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், விடுதியில் தங்கியிருக்கும் பெண்கள் ஆகியோரை குறி வைத்து சுமார் 23 வழிப்பறிகளில் கண்ணன் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.இதைத் தொடர்ந்து அவரிடமிருந்து ரூ.4.2 லட்சம் மதிப்புள்ள திருட்டு தங்கநகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவருக்கு வேறு எந்த வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகளில் தொடர்பு இருக்கிறதா என போலீஸார் விசாரணை நடத்தினர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.