முகப்பு
தற்போதைய செய்திகள்

இலங்கை போரின் போது நடந்தவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது : இந்தியா

இலங்கை போரின் போது நடந்தவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது என்று இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 21 மார்ச் 2013, 3:44 pm IST
பகிர்:

இலங்கை போரின் போது நடந்தவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது என்று இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனிவாவில் இன்று நடைபெறும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில், இந்தியா சார்பில் கலந்து கொண்டுள்ள திலிப் சின்ஹா பேசுகையில், ஐ.நா. தீர்மானத்தில் உள்ள 13வது அம்சத்தை இலங்கை நடைமுறைப்படுத்தி, இலங்கையில் மறு ஆக்கப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

இலங்கை மத்திய அரசில், தமிழர்களுக்கும் பங்களிக்க வேண்டும் என்ற குறிப்பை இலங்கை செயல்படுத்த முன்வர வேண்டும்.

Advertisement

Advertisement

இலங்கையில் காணாமல் போனோரின் விவரங்களையும், கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களையும் இலங்கை அளிக்க வேண்டும். மேலும், இலங்கை ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தனி நபர்களின் நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

போருக்குப் பிந்தைய நடைமுறைகளை பின்பற்ற இலங்கை அரசுக்கு கால அவகாசம் தரப்பட்டுள்ளது. இந்தியா - இலங்கை இடையேயான உறவு ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலானதாகும். அந்நாட்டுக்கு எதிராக செயல்படக்  கூடாது, ஆனால், அங்கு நடந்துள்ள விஷயங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. எனினும், இலங்கையுடனான நட்பை இந்தியா தொடரும். இலங்கை நாட்டுக்கு வர வேண்டும் என்று அந்நாட்டு அரசு விடுக்கும் அழைப்பை மனித உரிமை ஆணையத்தின் தலைவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.