கடை கதவை உடைத்து பணம் திருட்டு
சூளைமேடு செந்தில்நகரைச் சேர்ந்தவர் இலியாஸ் (31). இவர் அங்கு 100 அடி சாலையில் ஒரு ஸ்டேஷ்னரி கடை வைத்து நடத்தி வருகிறார். இலியாஸ் புதன்கிழமை இரவு வழக்கம்போல கடையை பூட்டவிட்டு வீட்டுக்குச் சென்றனர்.
சென்னை சூளைமேட்டில் கடை கதவை உடைத்து பணம் திருடப்பட்டது.
சூளைமேடு செந்தில்நகரைச் சேர்ந்தவர் இலியாஸ் (31). இவர் அங்கு 100 அடி சாலையில் ஒரு ஸ்டேஷ்னரி கடை வைத்து நடத்தி வருகிறார். இலியாஸ் புதன்கிழமை இரவு வழக்கம்போல கடையை பூட்டவிட்டு வீட்டுக்குச் சென்றனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை காலை இலியாஸ் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் கதவு உடைக்கப்பட்டு, அங்கிருந்த ரூ. 40 ஆயிரம் திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர், சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப் புகாரின் அடிப்படையில் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.