நாமக்கல்லில் பெண்ணிடம் 20 சவரன் நகை பறிப்பு
நாமக்கல்லில் போலீஸ் என்று கூறி ஏமாற்றி பெண்ணிடம் சுமார் 20 சவரன் தங்க நகைகளை பறித்துச் சென்றுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்லில் போலீஸ் என்று கூறி ஏமாற்றி பெண்ணிடம் சுமார் 20 சவரன் தங்க நகைகளை பறித்துச் சென்றுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல், ஏஎஸ் பேட்டையைச் சேர்ந்த ராஜம் (50) மார்க்கெட்டுக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது, இருவரை ராஜத்தை அழைத்து, தாங்கள் காவல்துறையினர் என்றும், நகைகளை அணிந்து செல்ல வேண்டாம், கழற்றி பேப்பரில் சுற்றி எடுத்துச் செல்லுமாறும் கூறியுள்ளனர். இதற்கு ராஜம் மறுத்த நிலையில், வேறொரு வாகனத்தில் வந்த இருவர், அவர்களை காவல்துறை உயர் அதிகாரிகள் போல பேசியுள்ளனர்.
இதனால், அவர்களை நம்பிய ராஜம், அவர்களிடம் நகைகளைக் கொடுத்து பேப்பரில் சுற்றியுள்ளார். அதனை பையில் வைத்து வீட்டுக்கு வந்து பார்த்த போது, அதில் வெறும் கற்கள் மட்டுமே இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தராஜம், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Advertisement
Advertisement