ஸோபியானில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸோபியானில் இன்று போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸோபியானில் இன்று போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் முகாம் மீது நடந்த தாக்குதலை அடுத்து ஏற்பட்ட மோதலை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் 4 பேர் பலியாயினர்.
4 பேர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இன்று ஸோபியானில் போராட்டம் நடத்தியவர்களை நோக்கி பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் கொல்லப்பட்டார். இதனால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Advertisement
கடந்த சனிக்கிழமை அப்பகுதியில் நடந்த போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்ததை அடுத்து பதற்றம் ஏற்பட்டதால் அந்த மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. கடந்த 3 நாட்களாக இருந்த ஊரடங்கு உத்தரவு இன்று காலையில்தான் தளர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.