தற்போதைய செய்திகள்

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரிக்கை

சங்கத்தின் கடையநல்லூர் ஒன்றிய மாநாடு தலைவர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்றது.மாநாட்டுக் கொடியினை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டப் பொருளர் சந்திரசேகர் ஏற்றி வைத்தார்.சண்முகம் வரவேற்றார்.பணக்கொடி அஞ்சலி தீர்மானங்களை முன்மொழிந்தார்.இயக்க வேலை அறிக்கையை செயலர்

KUMARAMURUGAN

சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டுமென தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சங்கத்தின் கடையநல்லூர் ஒன்றிய மாநாடு தலைவர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்றது.மாநாட்டுக் கொடியினை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டப் பொருளர் சந்திரசேகர் ஏற்றி வைத்தார்.சண்முகம் வரவேற்றார்.பணக்கொடி அஞ்சலி தீர்மானங்களை முன்மொழிந்தார்.இயக்க வேலை அறிக்கையை செயலர் சேதுராமலிங்கமும்,வரவு-செலவு அறிக்கையை பொருளர் திரிபுரநாராயணனும் வாசித்தனர்.

இந்த கூட்டத்தில் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு ரூ. 3000 ஓய்வூதியம் வழங்க வேண்டும்.சமையலர் மற்றும் உதவியாளர்களின் ஓய்வு வயதினை 60ஆக உயர்த்த வேண்டும்.காலியாக உள்ள சமையலர்,உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.10 வருடங்கள் பணிநிறைவு செய்த உதவியாளர்களை,சமையலர்களாக பதவி உயர்வு செய்ய வேண்டும்.2012-ம் ஆண்டில் நடைபெற்ற சமூக பொருளாதாரம் மற்றும் சாதி வாரி கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களுக்கு உரிய பணப்பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலர் சண்முகசுந்தரம்,அரசு ஊழியர் சங்க தென்காசி வட்டச் செயலர் ராதாகிருஷ்ணன்,சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ராமையா உள்ளிட்டோர் பேசினர்.ஹமிதாள் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளை ரோஜா... நேஹா ஷெட்டி!

ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் அரைசதம்; இந்தியா 166 ரன்கள் முன்னிலை!

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

SCROLL FOR NEXT