சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ரேஷன் கடையில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக விற்பனையாளர் தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கூட்டுறவு சங்கங்களின் சேலம் மண்டல இணைப் பதிவாளர் வெ.லட்சுமி, கடந்த சில நாள்களாக சேலம் மாவட்டம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களின் சார்பில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தி வருகிறார். அதன்படி, ஓமலூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் நடத்தப்படும் எப்.பி. 002 என்ற எண்ணுள்ள கடைக்கு சனிக்கிழமை சோதனைக்காக சென்றுள்ளார்.
அப்போது கடைக்கு வெளியே நின்றிருந்த விற்பனையாளர் தனலட்சுமி, கடைக்கான சாவி தன்னிடம் இல்லை என்று பொறுப்பற்ற முறையில் பதில் கூறியதாகத் தெரிகிறது. மேலும் இந்த கடையில் முறைகேடுகள் ஏராளமாக நடைபெறுவதாக அக்கம் பக்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் கடையில் உள்ள பொருள்களை ஆய்வு செய்ததில் இருப்பு குறைவாக இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து விற்பனையாளருக்கு ரூ.2,200 அபராதம் விதித்ததுடன் அவரை தாற்காலிக பணி நீக்கம் செய்தும் இணைப் பதிவாளர் உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.