தற்போதைய செய்திகள்

வழித்தடப்பிரச்னையில் விவசாயி கழுத்து நெரித்து கொலை: 2 பெண்கள் உள்பட மூவர் கைது

வழித்தட பிரச்னையில் புதுச்சத்திரத்தில் விவசாயி ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார். பலத்த காயமடைந்த அவரது மகன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக

தமிழ்ச்செல்வன்

வழித்தட பிரச்னையில் புதுச்சத்திரத்தில் விவசாயி ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார். பலத்த காயமடைந்த அவரது மகன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக 2 பெண்கள் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் புதுச்சத்திரம் அருகே கொளத்துப்பாளையம் ஒரத்துப்பாளையத்தைச் சேர்ந்த செல்லப்பனின் மகன் அத்தாயி(65). இவரது தோட்டத்துக்கு செல்லும் பாதை தொடர்பாக பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்த கருப்பண்ணன் மகன் குமாரசாமி(70) என்பவருடன் பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அத்தாயி தோட்டத்துக்கு செல்லும் பாதையை குமாரசாமி அடைத்து முள்வேலி ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. இதனால், அத்தாயி குமாரசாமியிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த குமாரசாமி தனது கையில் இருந்த கொடுவாளால் அத்தாயின் தலையில் இரு இடங்களில் வெட்டியதாகத் தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த அத்தாயி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, அத்தாயியின் மருமகன் பழனிவேலு(42), ஞாயிற்றுக்கிழமை இரவு குமாரசாமி வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவரிடையே ஏற்பட்ட சண்டையில் பழனிவேலு குமாரசாமியின் கழுத்தை நெரித்து கொலை செய்தாராம். அந்த நேரத்தில் அங்கு வந்த குமாரசாமியின் மகன் சீனிவாசனை பழனிவேலுவின் மனைவி பூங்கொடி(35), அவரது சகோதரி குப்பாயி(45) ஆகியோர் அடித்துக்கொலை செய்ய முயன்றதாகத் தெரிகிறது. அப்போது சீனிவாசன் எழுப்பிய சத்தத்தை அடுத்து பழனிவேலு, பூங்கொடி, குப்பாயி அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். பலத்த காயமடைந்த சீனிவாசனை அப்பகுதி மக்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

தகவலறிந்த புதுசத்திரம் காவல் ஆய்வாளர் செல்லமுத்து(பொறுப்பு), உதவி ஆய்வாளர் இளங்கோவன் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று குமாரசாமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். தொடர்ந்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து பழனிவேலு, பூங்கொடி, குப்பாயி ஆகிய மூவரையும் கைது செய்தனர். இந்த கொலைச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT