தற்போதைய செய்திகள்

மத்திய அரசைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதாக அறிவித்த மத்திய அரசைக் கண்டித்து ரயில் நிலையம் முன்பு அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில்

எஸ். பாண்டியன்

நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதாக அறிவித்த மத்திய அரசைக் கண்டித்து ரயில் நிலையம் முன்பு அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் ரயில் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு எம்.ஜி.ஆர். மன்ற  இளைஞரணி செயலாளரும், சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினறுமான ஆர்.பி.உதயகுமார் தலைமை வகித்தார். ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் கோபால்சாமி முன்னிலை வகித்தார்.இதில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில்,

தமிழகத்திற்கு மின்சாரம் வழங்குவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஆகும். எனவே இந்த நிறுவனத்தின் குறிப்பிட்ட அளவு பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யப்போவதாக ஜூன்-21ம் தேதி மத்திய அரசு அறிவித்திருந்தது. மத்திய அரசின் இச்செயலுக்கு தமிழக முதல்வரும் கடும் கண்டனத்தை தெரிவித்தார். மேலும், குறிப்பிட்ட இந்நிறுவனத்தின் பங்குகளை தமிழக அரசிற்கு மட்டுமே விற்க வேண்டும் என்பதை குறிப்பிட்டும், இதனால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவைகள் குறித்தும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் மூலம் விளக்கமாக வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பரிசீலனை செய்யப்படும் என்றும், மற்றொரு அமைச்சர் தனியாருக்கு விற்பனை செய்வதில் எந்த மாற்றமும் இல்லையென என்பது குறித்து ஒவ்வொருவரும் பேசி வருகின்றனர். இதைக் கேட்டு பிரதமரும் மௌனமாக இருந்து வருகிறார். அதனால், லாபத்தில் இயங்கும் இந்நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்க துடிக்கும் மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கினை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க கூடாது, தொழிலாளர்களுக்கு எதிரான  விரோத போக்கையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணா தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.கே.பாண்டியன், சாத்தூர் ஒன்றியச் செயலாளர் ஷன்முகக்கனி, விருதுநகர் ஒன்றியச் செயலாளர் மூக்கையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், இதில் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை ஆகிய வட்டார பகுதிகளில் இருந்து அதிமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT