விருதுநகரில் நடிகர் விஷால் கதநாயகனாக நடிக்கும் பாண்டிய நாடு என பெயரிடப்பட்டுள்ள சினிமா படத்தின் படப்பிடிப்பு இன்று நடைபெற்றது.
விருதுநகரில் பழைய பேருந்து நிலையம் முன்பு தேசபந்து மைதானத்தி்ல் நடிகர் விஷால் தயாரிப்பில் உருவாகும் பாண்டிய நாடு சினிமா படப்பிடிப்பிற்காக தயார் நிலையில் வந்தனர். அப்போது, நகராட்சியில் இருந்து அனுமதி பெறாமல் படப்பிடிப்பை நடத்தக் கூடாது என அலுவலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையடுத்து, விஷால் தரப்பிலிருந்து ஏற்கனவே தலைமைச் செயலகத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இங்கும் அனுமதி பெறவேண்டும் என தெரிவித்ததை அடுத்து நாள் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் என நிர்ணயம் செய்து 8 நாள்களுக்கான கட்டணத்தை மொத்தமாக செலுத்தி அனுமதி பெற்றனர்.
அதையடுத்து, தெப்பக்குளம் அருகே காமராஜர் நினைவில்லம் முன்பு பாடல் காட்சியின் படபிடிப்பு நடைபெற்றது. பின்னர் தேசபந்து மைதானம், தெப்பக்குளம், பாவாலி சாலை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த படபிடிப்பை விருதுநகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.