தற்போதைய செய்திகள்

தீக்குளித்து தாய் பலி: தொட்டில் திட்டத்தில் குழந்தை சேர்ப்பு

புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கத்தை சேர்ந்தவர் பச்சையப்பன்(33). தொழிலாளி. கடந்த மூன்று மாதங்களுக்கு முன் இவர் விபத்தில் சிக்கி பலியானார். இந்த அதிர்ச்சியில் இவரின் மனைவி தனசெல்வி(30) மனநிலை பாதிக்கப்பட்டார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு அண்மையில் ஆண் குழந்தை

VASUDEVAN.K

மனநிலை பாதிக்கப்பட்ட தாய் தீக்குளித்து இறந்ததால் அனாதையான ஒன்றரை மாத ஆண் குழந்தை தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் சேர்க்கப்பட்டது.

புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கத்தை சேர்ந்தவர் பச்சையப்பன்(33). தொழிலாளி. கடந்த மூன்று மாதங்களுக்கு முன் இவர் விபத்தில் சிக்கி பலியானார். இந்த அதிர்ச்சியில் இவரின் மனைவி தனசெல்வி(30) மனநிலை பாதிக்கப்பட்டார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது.கடந்த பத்து நாட்களுக்கு முன் தனசெல்வி தனது ஒன்றரை மாத ஆண்குழந்தையை தூக்கிக்கொண்டு கடலூர் நோக்கி நடந்து வந்தார். கடலூர் விருத்தாசலம் மார்க்கத்தில் கோதண்டராமபுரம் அருகே சென்றபோது கடும் வெயில் காரணமாக குழந்தையுடன் மயங்கி விழுந்தார். உடனே கிராம மக்கள் தாயையும் குழந்தையும் பாதுகாத்து குடிநீரும், உணவும் அளித்தனர்.

இந்நிலையில் கடந்த மாதம் 30-ம் தேதி தனசெல்வி திடீரென்று தீக்குளித்து உயிருக்கு போராடினார். அருகிலிருந்த குழந்தையை கிராம மக்கள் காப்பாற்றி பாதுகாத்தனர். கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தனசெல்வி உயிரிழந்தார்.தந்தையையும், தாயையும் இழந்து அனாதையான அக்குழந்தை கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. தகவல்அறிந்த சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் திலீப்குமார் குழந்தையை வியாழக்கிழமை கடலூர் தலைமை மருத்துவமனையில் அரசு தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் சேர்த்தார். அங்கு குழந்தை இன்குபேட்டரில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT