கடலூர் மாவட்டத்தில் எய்ட்ஸ் பாதித்த 38 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு இணைந்து வழங்கும் தமிழ்நாடு எச்ஐவி, எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான தமிழ்நாடு அறக்கட்டளை மூலம் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட 38 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைக்கான காசோலை ரூ.1,20,000 வழங்கினார். இதில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள 12 குழந்தைகளுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.24 ஆயிரமும், 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு ரூ.3 ஆயிரம் வீதம் 17 பேருக்கு ரூ.51 ஆயிரமும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் 9 பேருக்கு ரூ.5,000 வீதம் ரூ.45 ஆயிரமும் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.