தற்போதைய செய்திகள்

குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது: மாவட்ட ஆட்சியர்

விருதுநகர் அருகே சூலக்கரை தனியார் அரங்கத்தில் வேல்டு விஷன் இந்தியா தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு தின கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கை

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் அரசின் தொடர் நடவடிக்கையால் தனியார் நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதாக மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்தார்.

விருதுநகர் அருகே சூலக்கரை தனியார் அரங்கத்தில் வேல்டு விஷன் இந்தியா தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு தின கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் பேசியதாவது: குழந்தையின்  வருமானம் வீட்டிற்கு அவமானம் என்பதை உணர்ந்தும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 14 வயதிற்குட்பட்டவர்களை வருமானம் தரும் தொழிலில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடுத்தக் கூடாது. அதேபோல், பட்டாசு தொழிலில் ஈடுபடுத்துவம், பீடி சுருட்டலுக்கு அனுப்புவதும் குற்றமாகும்.

இப்பிரச்னை இந்தியாவில் மட்டுமில்லை, உலகம் முழுவதிலும் இருந்து வரும் பிரச்னை ஆகும். கடந்த 2001 ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 1.26 கோடி பேர்கள் வரையில் குழந்தை தொழிலாளர்கள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தொழிலாளர்கள் உருவாதற்கு காரணம் பெற்றோர்களின் வறுமையை காரணம் காட்டப்படுவது என்பது உண்மையில்லை. அரசு குழந்தை தொழிலாளர்கள் முறையை ஒழிப்பதற்காக பள்ளிகளில் தொடக்க வகுப்பு முதல் 12-வது வகுப்பு வரையில் பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதுபோன்ற திட்டங்களை பயன்படுத்தினாலே குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கலாம்.

அரசும் குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அபராதமும் விதித்து வருகிறது. அதன் பேரில் தற்போது தொழிலாளர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டம் அலுவலகம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் பல்வேறு நடவடிக்கை மூலம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கு முன்பு வரையில் குழந்தை தொழிலாளர் திட்டத்தில் 54 பள்ளிகள் நடத்தப்பட்டு வந்தன. அவர்களை நல்வழிப்படுத்தி, தொடர் பள்ளிகளில் சேர்த்து நன்றாக படித்து உயர் கல்விக்கு சென்று படித்து வருகின்றனர். எனவே தொடர் நடவடிக்கை எடுத்ததன் அடிப்படையில் தற்போது குழந்தைகள் தொழிலாளர் எண்ணிக்கை குறைந்து 19 பள்ளிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பள்ளிகள் மூலம் தொடர்ந்து படித்து உயர் கல்விக்குச் செல்வதோடு, அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்திக் கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதில் வேல்டு விஷன் இந்தியாவின் குழந்தைகள் வளர்ச்சி பிரிவு மேலாளர் சாந்தி எபிநேசர் முன்னிலை வகித்தார். தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர்  மைவிழிச்செல்வி வாழ்த்துரை வழங்கினார். மாவட்டக் கல்வி அலுவலர் ராமசந்திரன், செந்திக்குமார நாடார் கல்லூரியின் பேராசிரியர் டேவிட்பொன்னகர், திருச்சுழி ஸ்பீச் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் எஸ்தர் மற்றும் பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மேலும், இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேல்டு விஷன் இந்தியாவின் குழந்தைகள் வளர்ச்சி பிரிவு ஒருங்கிணைப்பாளர்கள் ஜெபச்செல்வம், சாமுவேல்சேசுதாசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT