சாலை விபத்தில் ஒருவர் சாவு
காஞ்சிபுரத்தை அடுத்த ஐயம்பேட்டை அருகே புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் அர்ஜுனன் (53). தனியார் பள்ளி வாகன டிரைவர். அவர் சனிக்கிழமை புதுப்பேட்டையில் இருந்து காஞ்சிபுரத்தை அடுத்த உத்ரமேரூர் சாலையில்
காஞ்சிபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இறந்தார்.
காஞ்சிபுரத்தை அடுத்த ஐயம்பேட்டை அருகே புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் அர்ஜுனன் (53). தனியார் பள்ளி வாகன டிரைவர். அவர் சனிக்கிழமை புதுப்பேட்டையில் இருந்து காஞ்சிபுரத்தை அடுத்த உத்ரமேரூர் சாலையில் உள்ள காவந்தண்டத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது களக்காட்டூர் கூட்டு சாலை அருகே, எதிரே ஒரு சைக்கிள் வந்துள்ளது. அதன் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளைத் திருப்பிய போது நிலை தடுமாறி அர்ஜுனன் கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். மாகரல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.