தற்போதைய செய்திகள்

விருதுநகர்அருகே மனைவி இறந்த துக்கத்தில் விஷம் குடித்த கணவர்

விருதுநகர் அருகே சத்திரரெட்டியபட்டி அரசு குடியிருப்பில் குடியிருந்து வரும் ராமலிங்கத்தின் மகன் கோபிகிருஷ்ணன் என்கிற கோபிநாத்(27). இவர் கோவையில் தனியார் பங்கு வர்த்தக நிறுவனத்தில்

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே மனைவி இறந்த துக்கத்தில் விஷம் குடித்த கணவர் இன்று அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விருதுநகர் அருகே சத்திரரெட்டியபட்டி அரசு குடியிருப்பில் குடியிருந்து வரும் ராமலிங்கத்தின் மகன் கோபிகிருஷ்ணன் என்கிற கோபிநாத்(27). இவர் கோவையில் தனியார் பங்கு வர்த்தக நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், குமிழங்குளத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவர் திருச்சுழி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் கண்மணிக்கும் கடந்த மே 20-ம் தேதி திருமணம் ஆனது.

இந்நிலையில் ஒரு வாரம் வரையில் இருந்து விட்டு மறுபடியும் மனைவியை அழைக்காமல் கோவைக்கு பணிக்குச் சென்றாராம். கணவர் வீட்டில் குடியிருந்த வந்த நிலையில் செவ்வாய்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கடிதம் எழுதி வைத்து கண்மணி தூக்கிட்டு உயிரிழந்தார். இந்த தகலறிந்து வந்த கோபிநாத் துக்கம் தாளமல் இரவு முழுவதும் கவலையில் இருந்த நிலையில் இன்று காலையில் விஷம் குடித்தாராம். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஏற்கனவே இது குறித்து தலைமைக் காவலர் செல்வம் பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதில், திருமணமான நாளிலிருந்து எனது மகள் நிம்மதியாக இருந்ததில்லை. அந்தளவிற்கு மாமனார் உள்ளிட்ட அனைவரும் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். அதோடு, கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரிழந்துள்ளதாகவும் கூறியுள்ளனர். எனது மகள் ஆங்கிலத்தில் மட்டுமே கையொழுத்திடுவார் என்பது குறித்து புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் கோபிநாத், அவரது தாய்,தந்தை உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT