தற்போதைய செய்திகள்

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம்: கணவர், மாமியார் கைது

விருதுநகர் அருகே உள்ள சத்திரரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்த பொன்னுத்தாய் என்பவரின் மகன் கோபிநாத் என்ற கோபிகிருஷ்ணன். இவர் கோவையில் உள்ள தனியார் பங்கு வர்த்தக நிறுவனத்தில்

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே வரதட்சணை கேட்டு சித்ரவதையால் தூக்கிட்டு உயிரிழந்த இளம்பெண் சம்பவம் தொடர்பாக அவரது கணவர் மற்றும் மாமியார் ஆகியோரை இன்று பாண்டியன் நகர் போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் அருகே உள்ள சத்திரரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்த பொன்னுத்தாய் என்பவரின் மகன் கோபிநாத் என்ற கோபிகிருஷ்ணன். இவர் கோவையில் உள்ள தனியார் பங்கு வர்த்தக நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். எரிச்சநத்தம் அடுத்துள்ள குமிழங்குளம் செல்வம்(திருச்சுழியில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார்) என்பவரின் மகள் கண்மணிக்கும்(23) கடந்த மே-20ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் 20 நாள்கள் வரையில் இருந்து விட்டு பின்னர் கோவைக்குச் சென்றுவி்ட்டாரம்.

ஏற்கனவே திருமணமான நாளில் இருந்தே கணவரும், மாமியார் பொன்னுத்தாயும் உள்ளிட்டோரும் சீர்வரிசை சரியாக செய்யவில்லை எனக் கூறியும், நகையும் அதிகமாக போடவில்லையெனக் கூறி சித்ரவதை செய்து வந்தார்களாம். இதனால், மனம் வெறுத்த கண்மணி கடந்த செவ்வாய்கிழமை காலையில் வீட்டில் அனைவரும் வெளியே சென்றிருக்கும் நேரத்தில் உத்திரத்தில் தூக்கி்ட்டு உயிரிழந்தாராம்.இது குறித்து மணப்பெண்ணின் தந்தை செல்வம் பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வந்தனர். எனவே இது தொடர்பாக கணவர் கோபிநாத், மாமியார் பொன்னுத்தாய் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT