தற்போதைய செய்திகள்

தரமற்ற சுனாமி குடிருப்பு: கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கூறி ஒருவர் தீக்குளிப்பு

கடலூர் மாவட்டத்தில் சுனாமி குடியிருப்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் தரமில்லாமல் உள்ளதாகக் கூறி மனு கொடுக்க வந்தவர், ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்தார்.

பெ. விஜயபாஸ்கர்

கடலூர் மாவட்டத்தில் சுனாமி குடியிருப்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் தரமில்லாமல் உள்ளதாகக் கூறி மனு கொடுக்க வந்தவர், ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்தார்.

கடலூர் மாவட்டம் ரெட்டிசாவடி அருகே உள்ள நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்தவர் மணி (42). இது, சுனாமி தாக்குதலுக்கு உள்ளான கிராமம். இங்கே சுனாமி குடியிருப்புகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. ஆனால், அவை தரமற்ற முறையில் கட்டிக் கொடுக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயரதிகாரிகளிடம் கடந்த  5 வருடங்களாக பலமுறை மனு கொடுத்திருக்கிறார் மணி.

இந்நிலையில், இவர் இது தொடர்பாக ஊரக வளர்ச்சி அதிகாரி ஒருவரை தாக்கியதாகவும் ஒரு புகார் உள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமை மனு நீதி நாளான இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனுகொடுக்க வத்த மணி, திடீரென்று தீக்குளித்தார். அவரை உடனே காப்பாற்றி, கடலூர் மாவட்ட மருத்துவமனையில் போலீஸார் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

மணியின் மனைவி அருகில் உள்ள சிங்கர்குடி பஞ்சாயத்தின் துணைத்தலைவி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT