ஐபிஎல் 6: சென்னை அணி 141/4 (20 ஓவர்)
ஐபிஎல் சீஸன் 6 போட்டி எண் 61ல் இன்று ஜெய்ப்பூரில் நடைபெறும் ராஜஸ்தான், சென்னை
ஐபிஎல் சீஸன் 6 போட்டி எண் 61ல் இன்று ஜெய்ப்பூரில் நடைபெறும் ராஜஸ்தான், சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 141 ரன் எடுத்தது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பந்து வீசத் தீர்மானித்தது. இதை அடுத்து களம் இறங்கிய சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்கள், நல்ல துவக்கத்தை அளித்தனர். ஹஸி 40 பந்துகளில் 41 ரன் சேர்த்தார். முரளீ விஜய் 50 பந்துகளில் 51 ரன் சேர்த்தார். ஆனால், ரெய்னாவும் தோனியும் அடுத்தடுத்து 1 ரன்னிலும் 2 ரன்னிலும் ஆட்டம் இழந்ததால் ரன் எடுக்கும் வேகம் பெரிதும் தடைப் பட்டது. ஜடேஜா 14 பந்தில் 12 ரன்னும், பிராவோ 11 பந்தில் 23 ரன்னும் எடுத்தனர். இதனால் சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 141 ரன் எடுத்தது.