சென்னையில் வாகன சோதனை: 500 பேர் பிடிப்பட்டனர்
சென்னையில் நேற்று(சனிக்கிழமை) நள்ளிரவு போலீஸார் குற்றச்செயல்களை தடுப்பதற்காக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் சந்தேகத்துக்கிடமாக சுற்றி திரிந்த 400 பேர் பிடிபட்டனர்
சென்னையில் சனிக்கிழமை நள்ளிரவு போலீஸார் மேற்கொண்ட வாகன சோதனையில் 500 பேர் பிடிப்பட்டனர்.
சென்னையில் நேற்று(சனிக்கிழமை) நள்ளிரவு போலீஸார் குற்றச்செயல்களை தடுப்பதற்காக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் சந்தேகத்துக்கிடமாக சுற்றி திரிந்த 400 பேர் பிடிபட்டனர் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 14 பேரும், குடி போதையில் வாகனம் ஓட்டிய 144 பேரும் சிக்கினர். வேகமாக வாகனம் ஓட்டிய குற்றத்துக்காக 57 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.