தற்போதைய செய்திகள்

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையின்போது பெண் சாவு :அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையின்போது பெண் உயிரிழந்தார். மருத்துவர்கள் அலட்சியத்தால் உயிரிழந்ததாக, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கே.விஜயபாஸ்கா்

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையின்போது பெண் உயிரிழந்தார். மருத்துவர்கள் அலட்சியத்தால் உயிரிழந்ததாக, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 கடலூர் மாவட்டம் மங்களூர் அருகே, மலையூனூரை சேர்ந்தவர் ராமதாஸ். இவர் மனைவி அன்னவள்ளி(24).  இவருக்கு  கடந்த 45 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் குடும்ப கட்டுப்பாடு அறுவைசிகிச்சைக்காக மங்களூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அன்னவள்ளி திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

 அங்கு அறுவைசிகிச்சை செய்துகொண்ட பிறகு, ரத்தப்போக்கு அதிகமானதால்  விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அன்னவள்ளி கொண்டுசெல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

 மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறி, மங்களூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர். இதனைத்தொடர்ந்து அங்கு சென்ற ராமநத்தம் போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து போராட்டம் விலக்கிகொள்ளப்பட்டது.

 உடற்கூறு பரிசோதனைக்கு பிறகு, அன்னவள்ளி உடல் உறவினர்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT