முகப்பு
தற்போதைய செய்திகள்

வணிகவரித்துறையினர் ஆர்ப்பாட்டம்

வணிக வரித்துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 26 அக்டோபர் 2013, 10:10 pm IST
பகிர்:

வணிக வரித்துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வணிக வரித்துறை அலுவலகம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படுகிறது. இந்த அலுவலகம் முன்பு தமிழ்நாடு வணிக வரித் துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எழிலன் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள, வணிகவரித் துறை அலுவலக ஊழியர்கள் இதில் பங்கேற்றனர். பதவி உயர்வு, உரிய காலத்தில் பணிவரன்முறை, காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.