தற்போதைய செய்திகள்

என்எல்சி நிலத்தில் குடியிருப்போர் மாற்று இடம் கோரி தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்

கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் அருகில் உள்ள தாண்டவன்குப்பம், ஒர்க்ஷாப் கேட், ஆட்டோகேட், அண்ணா ஸ்டாப் ஆகிய குடிசைப் பகுதிகள் என்எல்சிக்கு சொந்தமான நிலத்தில் உள்ளது. இங்குள்ள மக்கள்

பெ. விஜயபாஸ்கர்

நெய்வேலியில் என்எல்சி நிலத்தில் குடியிருப்போர் மாற்று இடம் கோரி நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் அருகில் உள்ள தாண்டவன்குப்பம், ஒர்க்ஷாப் கேட், ஆட்டோகேட், அண்ணா ஸ்டாப் ஆகிய குடிசைப் பகுதிகள் என்எல்சிக்கு சொந்தமான நிலத்தில் உள்ளது. இங்குள்ள மக்கள் என்எல்சி நிறுவனம் துவங்கிய காலத்திலிருந்தே அங்கு வசித்து வருகின்றனர். பெரும்பாலோனோர் ஒப்பந்த மற்றும் கூலித் தொழிலாளிகள்.

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குள்பட்ட இப்பகுதியில் 1,600 வாக்காளர்கள் உள்ளனர். சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக கையகப்படுத்தும் பணி கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருவதால், குடிசைப்பகுதிகளுக்கு மின்சாரம், குடிநீர் துண்டிக்கப்பட்டது. பல்வேறு போராட்டங்களுக்கு பின் குடிநீர், மின்சாரம் குறிப்பிட்ட கால அளவிற்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

அப்பகுதி  மக்களின்  கோரிக்கையான மாற்று இடம் வழங்க வேண்டும், தற்காலிகமாக இப்பகுதிக்கு தடையற்ற மின்சாரமும், குடிநீரும் வழங்க வேண்டும், இல்லையேல் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போம் என கடந்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவித்திருந்தனர்.ஆனால் இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்படாத நிலையில் வியாழக்கிழமை நடந்த நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தாண்டவன்குப்பம் வாக்குப்பதிவு மையத்தில் 3 வாக்குச்சாவடிகளில் மொத்தமுள்ள 1,600 வாக்குகளில் 1 மணி வரை 80 வாக்குகள் மட்டுமே பதிவாகியது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் வாக்குப்பதிவை புறக்கணித்து வாக்குப்பதிவு மையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போராட்டக்குழு தலைவப் பகத்சிங் கூறியது, இங்கு குடியிருப்புவர்களில் பலரும் என்எல்சி நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுபவர்கள். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேல் குடியிருக்கும் மக்களை வெளியேற்ற எண்ணி, என்எல்சி நிறுவனம் பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தி வருகிறது. மக்களுக்கு வசிப்பிடம் வேண்டும் என்பது அடிப்படை உரிமை. இதனை வழங்க ஆட்சியாளர்கள் முன்வரவில்லை. மேலும் இங்கு கடந்த 3 ஆண்டுகளாக மின்சாரம், குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனைக்கண்டித்து தேர்தலை புறக்கணித்துள்ளோம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT