தற்போதைய செய்திகள்

இளம்பெண் குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை

ஆம்பூர் அருகே அயித்தம்பட்டு கிராமத்தை சேர்ந்த சரிதாவுக்கும் (23), ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.  இந்நிலையில்

எம். அருண்குமார்

ஆம்பூர் அருகே தன்னுடைய ஒன்றரை வயது ஆண் குழந்தையுடன் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆம்பூர் அருகே அயித்தம்பட்டு கிராமத்தை சேர்ந்த சரிதாவுக்கும் (23), ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.  இந்நிலையில் சரிதா தன்னுடைய ஒன்றரை வயது ஆண் குழந்தை முகிலனுடன் அயித்தம்பட்டு கிராமத்தில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு திங்கள்கிழமை வந்துள்ளார். வந்த அவர் வீட்டருகில் உள்ள ஒரு கிணற்றில் குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இருவருடைய சடலத்தையும் தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் மீட்டனர்.

தன்னுடைய மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி சரிதாவின் தாய் உமர்ஆபாத் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  திருப்பத்தூர் சார்-ஆட்சியர் ஷில்பா பிரபாகர் விசாரணை நடத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT