தற்போதைய செய்திகள்

அனுமதியின்றி ஆற்றில் மணல் அள்ளியதாக 2 பேர் கைது: 4 பேர் மீது வழக்கு பதிவு

விருதுநகர் அருகே அர்ஜூனா ஆற்றுப்பகுதி, சிற்றோடைகள் மற்றும் விளைநிலங்களுக்குள்பட்ட கரையோரங்களிலும் அரசு அனுமதியில்லாமல் மணல் கடத்திச் செல்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல்

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே அனுமதியின்றி ஆற்றில் மணல் அள்ளியதாக இரண்டு டிராக்டர்கள் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவைகளை வச்சக்காரப்பட்டி போலீஸார் பறிமுதல் செய்தனர்.

விருதுநகர் அருகே அர்ஜூனா ஆற்றுப்பகுதி, சிற்றோடைகள் மற்றும் விளைநிலங்களுக்குள்பட்ட கரையோரங்களிலும் அரசு அனுமதியில்லாமல் மணல் கடத்திச் செல்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் வச்சக்காரப்பட்டி காவல் ஆய்வாளர் அன்னராஜ் தலைமையில் போலீஸார் செவ்வாய்கிழமை இரவு திடீர் ரோந்து சென்றனர். அப்போது, அர்ஜூனா   ஆற்றுப்படுகையில் டிராக்டர்களில் மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்கள் போலீஸாரை பார்த்ததும் தப்பியோட முயற்சி செய்தனர். அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின்னர் அவர்களிடம் விசாரணை செய்ததில் முதலிபட்டியைச் சேர்ந்த ரமேஷ்(30),  தியாகராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜன்(35) ஆகியோருக்கு சொந்தமான டிராக்டர்கள் என்பது தெரியவந்தது. உடனே, இருவரையும் போலீஸார் கைது செய்ததோடு, மணல் அள்ளிய லோடுமேன்களான தியாகராஜபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன், தியாகராஜன், சதீஸ், காளிமுத்து உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இரண்டு டிராக்டர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள்,போலீஸார்கள் ரோந்து வருகிறார்களா என பார்ப்பதற்காக லோடுமேன்கள்  பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுபான்மையினா் வாழ்வுரிமை இயக்க அமைப்புக் கூட்டம்

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 88.63 அடி

கொங்கணாபுரம் மகா மாரியம்மன் ஆலய குடமுழுக்கு

சிறப்பு அலங்காரத்தில் ஆறுமுகவேலா் சுவாமி

குரும்பூா் தொடக்க கூட்டுறவு வங்கிக்கு பூட்டுப்போட்டு மக்கள் போராட்டம்

SCROLL FOR NEXT