விருதுநகர் அருகே அனுமதியின்றி மினி லாரியில் பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரிகளை கடத்தியதாக 3 பேரை வச்சக்காரப்பட்டி போலீஸார் கைது செய்தனர். அதோடு மினி லாரியையும், அதில் இருந்த 20 மூட்டை கருந்திரி கட்டுக்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
விருதுநகர் அருகே மன்னார்கோட்டை வழியாக தாயில்பட்டிக்கு மினி வாகனங்களில் பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரி கட்டுக்கள் மற்றும் அதற்கு பயன்படும் உற்பத்தி பொருள்கள் ஆகியவைகளை கடத்திச் செல்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் தர்மர் தலைமையில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனர். அப்போது, அவ்வழியாக மினிலாரி வந்து கொண்டிருந்த போது உள்ளேயிருந்தவர்கள் போலீஸார் நிற்பதை பார்த்து வாகனத்தை திருப்பி தப்பிக்க முயற்சித்தனர். உடனே சுற்றி வளைத்து போலீஸார் பிடித்தனர்.
பின்னர் லாரியில் சோதனையிட்ட போது கருந்திரி கட்டுக்கள் அடங்கிய சாக்கு மூட்டைகள் மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் உற்பத்தி பொருள்கள் ஆகியவைகள் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரித்த போது தாயில்பட்டியைச் சேர்ந்த பட்டாசு தொழில் ஒப்பந்தகாரர் கந்தசாமி(65), மினிவேன் கிளீனர் நாராயணன்(55), டிரைவர் கோபால்சாமி(50) என்கிற விவரம் தெரிய வந்தது. அதோடு, சாத்தூர் வெங்கடாஜலபுரம் வழியாக தாயில்பட்டிக்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிந்து 3 பேரையும் கைது செய்தனர். அதோடு, மினி லாரியையும், அதில் கடத்திச் சென்ற கருந்திரி கட்டுக்கள் அடங்கிய 20 ஆகியவைகளையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு போலீஸார் கொண்டு சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.