தற்போதைய செய்திகள்

பெண்களிடையே தரக்குறைவாக நடந்து கொள்ளும் ராணுவ அதிகாரி மீது புகார்

விருதுநகர் அருகே கண்டபடி பேசி, பெண்கள் முன்னிலையில் தரக்குறைவாக நடந்து கொள்ளும் ராணுவ அதிகாரி மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கிராம மக்கள் புதன்கிழமை புகார் மனு அளித்தனர்.

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே கண்டபடி பேசி, பெண்கள் முன்னிலையில் தரக்குறைவாக நடந்து கொள்ளும் ராணுவ அதிகாரி மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கிராம மக்கள் புதன்கிழமை புகார் மனு அளித்தனர்.

இது குறித்து கிருஷ்ணப்பநாயக்கன்பட்டி கிராம மக்களின் சார்பில் நாட்டாமை  சுநதராஜன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரனிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: விருதுநகர் அருகே செவலூர் ஊராட்சியைச் சேர்ந்த கிருஷ்ணப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் 1000-த்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதே கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைப்பாண்டி என்பவரின் மகன் முத்துமாரியப்பன்(25). இவர் கடந்த 4 வருடங்களாக ராணுவ வீரராக பணியாற்றி வருகிறாராம். இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை விடுமுறைக்காக ஊருக்கு வந்தார். இவர்  மாலை நேரங்களில் மதுக்குடித்து விட்டு தெருக்களில் போகிறவர்களை தகாத முறையில் பேசுவராம். அதோடு, பெண்கள் நடமாடும் போது தரக்குறைவாகவும் நடந்து கொள்கிறார். இதனால் இவர் இருக்கும் நேரத்தில் பெண்கள் அப்பகுதியில் நடமாடமுடியாத நிலை உள்ளது. கிராம மக்களின் வேண்டுகோளின் படி உறவின் முறை கூட்டத்திற்கு அழைத்துள்ளனர். அந்தக் கூட்டத்திலும் கட்டுப்படவில்லை. அதையடுத்து தாய், தந்தையர் மன்னிப்பு கேட்கும் படி கூறியுள்ளனர். இதையடுத்து இருவரையும் கிராம மக்கள் முன்னிலையே அடித்து உதைத்ததோடு, உங்களுக்கு இதுதான் கதி என்கிறார். ராணுவத்தில் நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால் கிராம மக்களும் பொறுமையோடு இருந்தனர். இதேபோல், ஒவ்வொரு முறையும் விடுமுறைக்கு வரும் போதும் இதே செயலைச் செய்து வருகிறார்.

இது தொடர்பாக எம்.புதுப்பட்டி காவல் நிலையத்திலும் புகார் செய்தோம். அங்கு மனு ரசீது கொடுத்து விசாரிக்காமலே அனுப்பி வைத்தனர். எனவே பெண்களை தரக்குறைவாக பேசும் ராணுவ வீரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  நாட்டம்மை சுந்தர்ராஜன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்எஸ்.மகேஸ்வரனிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், இகு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக  எஸ்.பி.தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!

என்டிஏ கூட்டணிக்கு சசிகலா, ஓபிஎஸ் வருவார்களா? - டிடிவி தினகரன் பதில்!

SCROLL FOR NEXT