தற்போதைய செய்திகள்

முதல்வர் ஜெயலலிதா வன்னியர் சமுதாயத்துக்கு எதிரானவர் அல்ல :வேல்முருகன் பேச்சு

தமிழக முதல்வர் ஜெயலலிதா வன்னியர் சமுதாயத்துக்கு எதிரானவர் அல்ல. ஜாதி அரசியல் செய்பவர்களின் பிரசாரம் பொய்யானது என்பது மக்களவை தேர்தலுக்கு பிறகு தெரியவரும்

பெ. விஜயபாஸ்கர்

தமிழக முதல்வர் ஜெயலலிதா வன்னியர் சமுதாயத்துக்கு எதிரானவர் அல்ல. ஜாதி அரசியல் செய்பவர்களின் பிரசாரம் பொய்யானது என்பது மக்களவை தேர்தலுக்கு பிறகு தெரியவரும் என்றார் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் தி.வேல்முருகன்.

 கடலூர் மக்களவை தொகுதி வேட்பாளர் அதிமுக வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன், கடலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சி அலுவலகத்தில் அக்கட்சி நிர்வாகிகளை புதன்கிழமை மாலை சந்தித்து ஆதரவு கோரினார்.

 இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் பேசியது, தமிழ் இன தலைவர், தமிழ் இன பேராளி என்று கூறிக்கொண்டு பதவி சுகங்களை அனுபவித்தவர்கள், தமிழர்களுக்கு எந்த நன்மையும் செய்யவிóல்லை. தமிழக மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டர் தமிழக முதல்வர் ஜெயலலிதா. அதனால் தான் அதிமுகவோடு கூட்டணி வைத்துள்ளோம்.

 வட மாவட்டங்களில் ஜாதி பெயரை சொல்லி அரசியல் செய்துகொண்டு, மோதல்களை ஏற்படுத்தி ஓட்டு வாங்க நினைப்பவர்கள், முதல்வர் ஜெயலலிதா வன்னியர்களுக்கு எதிரானவர் என்று பிரசாரம் செய்து வருகின்றனர்.

 முதல்வர் ஜெயலலிதா வன்னியர்களுக்கு எதிரானவர் இல்லை என்பதை, மக்களவை தேர்தல் முடிவு மூலம் தெரியவரும். அப்போது ஜாதி அரசியல் செய்பவர்களின் பிரசாரம் பொய் என்பதை வன்னியர் சமுதாய மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.

 வரும் மக்களவை தேர்தலில் கடலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும். அதற்கு எந்தவித தியாகத்துக்கும் தவாக தொண்டர்கள் தயாரக வேண்டும். 

 தமிழகத்தில் உள்ள பாமக உள்பட பெரும்பாலான கட்சிகளை சட்டமன்றம், நாடாளுமன்றத்துக்குள் அனுப்பியது அதிமுக தான். அந்த வரிசையில் 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தவாக சட்டமன்றம் செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

 இதில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசுகையில், கூட்டணி கட்சியினர் அதிமுக வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன் வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும். முதல்வரை நம்பியவர்களுக்கு வளர்ச்சி மட்டுமே இருக்கும். அந்த அடிப்படையில் இந்த தேர்தலில் தேர்தல் பணியாற்றும்போது என்ன பிரச்னை ஏற்பட்டாலும் என்னிடம் முறையிடலாம் என்றார்.

 கடலூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன் பேசுகையில், இந்த தேர்தலில் முதல்வருக்கு எதிரி யாரும் இல்லை. அவரால் வேட்பாளராக தேர்வுசெய்யப்பட்ட நான் கூட்டணி கட்சியினரின் அன்பையும், பொதுமக்களிடம் நன்மதிப்பையும் பெற உழைப்பேன். இதனால் தவாகா கட்சியினர், முதல்வர் அறிவித்த என்னை, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT