நடுக்கடலில் மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 6 மீனவர்கள் காயமடைந்தனர். இதனால் கடலூர் மீனவ கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கடலூர், அருகே தாழங்குடாவை சேர்ந்த மீனவர்கள் சுமார் 20 பேர், விசைப்படகில் அங்கிருந்து 6 கடல் மைல் தொலைவில் புதன்கிழமை மதியம் மீன் பிடித்துக்கொண்டிருந்ததாகவும், அப்போது அங்கு விசைப்படகில் வந்த தேவனாம்பட்டிணத்தை சேர்ந்த சுமார் 30 மீனவர்கள் அதே பகுதியில் மீன்பிடிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது இருதரப்பினருக்கும் இடையே நடுக்கடலுக்குள் ஏற்பட்ட மோதலில், படகில் இருந்த பொருட்களைக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டனர்.
இதில் தாழங்குடாவை சேர்ந்த பாபு, பாரதி, கர்ணன், பெருமாள், மணியரசன், வெங்கத்தான் ஆகிய 6 மீனவர்கள் காயமடைந்தனர். இதில் பாரதி, மணியரசன் இருவரும் தனியார் மருத்துவமனையிலும் மற்ற 4 பேர், கடலூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதுகுறித்து புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இரண்டு கிராம மீனவர்களிடையே தொடர் மோதலை தவிர்க்க போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.