விருத்தாசலத்தில் வழிப்பறியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவருக்கு தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
நெய்வேலி மந்தாரக்குப்பம் ஐ.டி.ஐ நகர் பகருதியைச் சேர்ந்த கௌதம் (26) என்பவர் கடந்த மார்ச் மாதம் விருத்தாசலம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த அம்பிகா என்பவரிடம் வழிப்பறி முயற்சியில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து அம்பிகா கொடுத்தப் புகாரின் பேரில், விருத்தாசலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கடந்த ஏப். 1-ம் தேதி கெüதமை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும், கௌதம் மீது விருத்தாசலம் காவல் நிலையத்தில் 7 வழக்குகளும் நெய்வேலி நகரிய காவல் நிலையத்தில் 5 வழக்குகளும் உள்ளன. இவர் கோலம் போடும் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுவதை வழக்கமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதிகா பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் கிர்லோஷ்குமார் கெüதமை தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையிலைக்க உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.