தற்போதைய செய்திகள்

கருத்துக்கணிப்புகளை எண்ணி தொண்டர்கள் அஞ்சி நடுங்கி மூலையில் முடங்கிப்போகமாட்டார்கள்: ஸ்டாலின்

கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரனின் தந்தையும், கரூர் வட்ட திமுக முன்னாள் செயலருமான என்.கே.காந்தியின் படத்திறப்பு நிகழ்ச்சி கரூர் ஒன்றியம் நன்னியூரில் புதன்கிழமை நடைபெற்றது.

ஏ. அருள்ராஜ்

கருத்துக்கணிப்புகளை எண்ணி தொண்டர்கள் அஞ்சி நடுங்கி மூலையில் முடங்கிப்போகமாட்டார்கள் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரனின் தந்தையும், கரூர் வட்ட திமுக முன்னாள் செயலருமான என்.கே.காந்தியின் படத்திறப்பு நிகழ்ச்சி கரூர் ஒன்றியம் நன்னியூரில் புதன்கிழமை நடைபெற்றது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் என்.கே.காந்தி படத்தைத் திறந்து வைத்து அவருக்கு புகழஞ்சலி செலுத்தி பேசுகையில், யார் யாரோ இன்றைக்கு கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இதில் அச்சுறுத்தலும், பயமுறுத்தலுமே தெரிகிறது. நாம்தான் வெற்றிப்பெறப்போகிறோம் என தெரிந்துக்கொண்டு நம்மை சோர்வடைய செய்வதற்காக இதனை செய்துள்ளனர்.

தேர்தல் விதிமுறைகளை மீறி பல்வேறு விஷயங்களை அரங்கேற்றியதுப்போல, வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போதும் அத்தகைய செயல்களை அரங்கேற்ற கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். திமுக தொண்டர்கள் இதற்காக அஞ்சி, நடுங்கி மூலையில் முடங்கிப்போகமாட்டார்கள். நன்னியூர் காந்தி போன்றவர்கள் நம்மை அப்படி வளர்க்கவில்லை. உண்மை விரைவில் வெளிவரத்தான் போகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT